டெல்லி அரசவைக்குச் சென்று பேரரசர் அக்பரைச் சந்தித்து, தங்கள் கிராமத்தின் முன்னேற்றத்துக்கு உதவிகள் செய்யச் சொல்லுமாறு, இஸ்லாமிய குரு பரீத் அவர்களிடம் அவரின் தோழர்கள் வற்புறுத்தினர். பரீத் அவர்களும் அக்பரின் அரசவைக்குச் சென்றார். அப்போது அக்பர் பிரார்த்தனை கூடத்தில் வழிபட்டுக் கொண்டிருந்தார். பிரார்த்தனை முடிந்து அக்பர் வெளியே வந்ததும், குரு பரீத் அவரிடம், தாங்கள் கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு பேரரசர் அக்பர், எனக்கு எல்லாச் செல்வங்களும், வெற்றிமேல் வெற்றியும், நீண்ட ஆயுளும் தரும்படி கடவுளிடம் மன்றாடினேன் என்று சொன்னார். குரு பரீத், அரசவையை விட்டு உடனடியாகப் புறப்பட்டார். அப்போது அவர், அரசவைக்குப் போகும்போது நான் ஒரு பேரரசரைச் சந்திக்கச் சென்றேன். ஆனால் நான் சந்தித்தது ஒரு பிச்சைக்காரனை என்று கூறிவிட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment